/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மண் வளத்தை அதிகரிக்க பசுந்தாள் உரப்பயிர் சாகுபடி
/
மண் வளத்தை அதிகரிக்க பசுந்தாள் உரப்பயிர் சாகுபடி
ADDED : மே 18, 2025 03:16 AM
திருவள்ளூர்:ரசாயன உரங்களால் பாதிக்கப்பட்ட வயல்வெளிகளில், மண் வளத்தை அதிகரிக்க பசுந்தாள் உரப்பயிர் சாகுபடி செய்யுமாறு, வேளாண் துறை ஆலோசனை வழங்கியுள்ளது.
திருவள்ளூர் மாவட்ட வேளாண் விதை பரிசோதனை மைய மூத்த வேளாண் அலுவலர் சுகுணா விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
திருவள்ளூர் மாவட்டத்தில் வேளாண் பணியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் பயிர் வளர்ச்சிக்காகவும், பூச்சிகளில் இருந்து பாதுகாத்து கொள்ளவும், ரசாயன உரங்களை அதிகளவில் பயன்படுத்துகின்றனர்.
இதன் காரணமாக, குறிப்பிட்ட ஆண்டுக்கு பின் மண்ணின் வளம் குறைந்து விடுகிறது.
இவ்வாறு மண் வளம் குறைந்த வயல்வெளிகளில், இயற்கையாக மண்வளத்தை மேம்படுத்த மணிலா, அகத்தி, தக்கைப்பூண்டு உள்ளிட்ட பசுந்தாள் உரப்பயிர் சாகுபடி செய்வர்.
பின், 15 - 20 நாட்களுக்கு ஒரு முறை நீர்ப்பாசனம் செய்து, விதைத்த 40 - 50 நாட்கள் கழித்து, மண்ணில் மடித்து உழுதுவிடுவர்.
இதன் வாயிலாக, மண்ணின் வளம் 15 - 20 சதவீதம் அதிகரிக்கும். மண்ணின் காற்றோட்டம் மேம்படும் மற்றும் நுண்ணுயிர் சத்துக்கள் அதிகரிக்கும். இதனால் விளைச்சல் அதிகரிக்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.