/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தைத்த துணி தராததால் டெய்லருக்கு வெட்டு
/
தைத்த துணி தராததால் டெய்லருக்கு வெட்டு
ADDED : செப் 30, 2024 06:30 AM
குன்றத்துார் : பீஹார் மாநிலத்தைச் சேர்ந்தவர் பிரமோத்குமார்,28. குன்றத்துார் அருகே பழந்தண்டலத்தில் தங்கி, அதே பகுதி துணி தைக்கும் டெய்லர் கடையில் பணியாற்றி வருகிறார்.
இந்த கடையில், பழந்தண்டலம், பெரிய காலனியைச் சேர்ந்த இளமாறன், 35, என்பவர் கடந்த 23ம் தேதி பேன்ட், சட்டை தைக்க கொடுத்துள்ளார்.
நேற்று முன்தினம் இரவு, கடைக்கு சென்ற இளமாறன், தைத்த துணியை கேட்டுள்ளார். உரிமையாளர் வெளியே சென்றதால், சிறிது நேரம் காத்திருக்குமாறு பிரமோத்குமார் கூறியுள்ளார்.
இதனால், ஆத்திரமடைந்த இளமாறன், தான் வைத்திருந்த கத்தியால் பிரமோத்குமார் தலையில் வெட்டி, பணம் கொடுக்காமல், தைத்து தயாராக வைத்திருந்த பேன்ட், சட்டையை எடுத்து, தப்பிச்சென்றார்.
பிரமோத்குமார், அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
குன்றத்துார் போலீசர் வழக்கு பதிவு செய்து, தலைமறைவான இளமாறனை தேடி வருகின்றனர்.

