/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஆந்திராவை மிரட்டும் 'மோந்தா' புயல் வெறிச்சோடிய தேசிய நெடுஞ்சாலை
/
ஆந்திராவை மிரட்டும் 'மோந்தா' புயல் வெறிச்சோடிய தேசிய நெடுஞ்சாலை
ஆந்திராவை மிரட்டும் 'மோந்தா' புயல் வெறிச்சோடிய தேசிய நெடுஞ்சாலை
ஆந்திராவை மிரட்டும் 'மோந்தா' புயல் வெறிச்சோடிய தேசிய நெடுஞ்சாலை
ADDED : அக் 27, 2025 11:19 PM

கும்மிடிப்பூண்டி: ஆந்திர மாநிலத்தை 'மோந்தா' புயல் மிரட்டி வரும் நிலையில், ஆந்திர - தமிழக கடலோர பகுதியில் அமைந்துள்ள, சென்னை - கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலை, வாகன போக்குவரத்து இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.
வங்க கடலில் நேற்று உருவான 'மோந்தா' புயல், ஆந்திர கடலோர மாட்டங்களை மிரட்டி வருகிறது. ஆந்திர கடலோர மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லுாரிகளுக்கு, நேற்று முதல் மூன்று நாட்களுக்கு ஆந்திர அரசு விடுமுறை அளித்துள்ளது.
புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, இரு நாட்களாக ஆந்திர கடலோர மாவட்டங்களை அரசு அலுவலர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில், கடலோர மாவட்டங்கள் வழியாக தமிழகத்தை இணைக்கும், சென்னை - கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், வாகன போக்குவரத்தும் வெகுவாக குறைந்துள்ளது.
இதனால், மேற்கு வங்கம், ஒடிஷா, ஜார்க்கண்ட், உத்தர பிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களில் இருந்து, தமிழகம் வரும் வாகனங்களின் எண்ணிக்கையும் குறைந்தது.
கும்மிடிப்பூண்டி அருகே எளாவூரில் உள்ள மாநில எல்லையோர சோதனைச்சாவடியில், தமிழகம் நோக்கி வரும் வாகனங்கள் எப்போதும் நீண்ட வரிசையில் காத்திருக்கும். நேற்று மாலை முதல், வாகன போக்குவரத்து இன்றி, சோதனைச்சாவடி வெறிச்சோடி காணப்பட்டது.

