/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
உபரிநீர் கால்வாயில் தடுப்பணை சேதம்
/
உபரிநீர் கால்வாயில் தடுப்பணை சேதம்
ADDED : மார் 31, 2025 03:15 AM

பள்ளிப்பட்டு:பள்ளிப்பட்டு ஒன்றியம் ஸ்ரீகாவேரிராஜபுரம் கிராமத்தின் மேற்கில் ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியின் வடக்கில் உபரிநீர் கால்வாய் செல்கிறது. இந்த கால்வாய் சொரக்காய்பேட்டை கிராமத்தின் வழியாக சென்று, கொசஸ்தலை ஆற்றில் கலக்கிறது.
ஏரியில் இருந்து வெளியேறும் உபரிநீர், கொசஸ்தலை ஆற்றில் கலக்க கால்வாய் கட்டப்பட்டுள்ளது. இந்த கால்வாயில் தடுப்பணையும் கட்டப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன், உபரிநீர் கால்வாய் 3.50 லட்சம் ரூபாய் மதிப்பில் துார்வாரி சீரமைக்கப்பட்டு தடுப்பணை கட்டப்பட்டது.
தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட இந்த தடுப்பணை, தற்போது உறுதித்தன்மை இழந்து இடிந்துள்ளது. இதனால், தடுப்பணைக்கு செலவிட்ட அரசு நிதி வீணாகியுள்ளது என, பகுதிவாசிகள் அதிருப்தி தெரிவிக்கின்றனர். எனவே, தடுப்பணையை சீரமைக்க வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.