/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சிட்ரபாக்கம் பகுதியில் ஆரணி ஆற்றின் கரை சேதம்
/
சிட்ரபாக்கம் பகுதியில் ஆரணி ஆற்றின் கரை சேதம்
ADDED : நவ 04, 2024 02:09 AM

ஊத்துக்கோட்டை:ஆந்திராவில் உருவாகி, தமிழகத்தை நோக்கி பாயும் ஆரணி ஆற்று நீரை பிச்சாட்டூர் கிராமத்தில் அணை கட்டி சேகரிக்கப்படுகிறது. பின் அங்கிருந்து சுருட்டப்பள்ளி அணைக்கட்டு வழியே, 65.20 கி.மீட்டர் பயணித்து தமிழக எல்லையான ஊத்துக்கோட்டையை அடைகிறது.
அங்கிருந்து சிட்ரபாக்கம், பனப்பாக்கம், செங்காத்தாகுளம், பெரியபாளையம், பாலேஸ்வரம், எ.என்.அணைக்கட்டு வழியே, 66.40 கி.மீட்டர் பயணித்து, பழவேற்காடு அருகே கடலில் கலக்கிறது. இதில் சிட்ரபாக்கம் பகுதியில் ஆரணி ஆற்றின் கரை சேதம் அடைந்துள்ளது.
பெரிய அளவில் சேதம் ஏற்படும் முன் சிட்ரபாக்கம் பகுதியில் ஆரணி ஆற்றின் கரையில் ஏற்பட்ட சேதத்தை சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.