/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கால்வாய் சிறுபாலம் சேதம் வாகன ஓட்டிகள் அவதி
/
கால்வாய் சிறுபாலம் சேதம் வாகன ஓட்டிகள் அவதி
ADDED : டிச 28, 2024 01:43 AM

பொன்னேரி:பொன்னேரி அடுத்த சிங்கிலிமேடு கிராமத்தில் இருந்து நரசிங்கமேடு வழியாக ஆமூர், மாலிவாக்கம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் சாலையில், மழைநீர் கால்வாயின் குறுக்கே சிறுபாலம் ஒன்று சேதம் அடைந்து உள்ளது.
சிறுபாலத்தின் தளம் முழுதும் கான்கிரீட் கட்டுமானம் சிதைந்து, ஓட்டை விழுந்து உள்ளது.
இதனால் வாகன ஓட்டிகள் சிறுபாலத்தை கடக்கும்போது தடுமாற்றம் அடைகின்றனர். இரவு நேரங்களில், ஓட்டை உள்ள பகுதியில் வாகனங்கள் சிக்கி தவிக்கின்றன.
சிலபாலம் பலவீனம் அடைந்து இருப்பதால் விவசாய பணிகளுக்கு அவ்வழியாக செல்லும் டிராக்டர், அறுவடை இயந்திரம் உள்ளிட்டவைகளால் எப்போது வேண்டுமானாலும் இடிந்து நொறுங்கும் நிலையும், அதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படும் சூழலும் உள்ளது.
மேற்கண்ட கால்வாய் பாலத்தை உடனடியாக சீரமைக்க சோழவரம் ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

