/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
வெள்ளோடையில் தடுப்பணை சேதம் மழைநீரை சேமிக்க முடியாத அவலம்
/
வெள்ளோடையில் தடுப்பணை சேதம் மழைநீரை சேமிக்க முடியாத அவலம்
வெள்ளோடையில் தடுப்பணை சேதம் மழைநீரை சேமிக்க முடியாத அவலம்
வெள்ளோடையில் தடுப்பணை சேதம் மழைநீரை சேமிக்க முடியாத அவலம்
ADDED : அக் 19, 2024 12:41 AM

பொன்னேரி:பொன்னேரி அடுத்த, தச்சூர் பகுதியில் இருந்து ஆண்டார்குப்பம், வெள்ளோடை, மூகாம்பிகை நகர் வழியாக ஆரணி ஆற்றிற்கு மழைநீர் செல்லும் கால்வாய் உள்ளது.
கடந்த, 2014ல், வெள்ளோடை கிராமத்தில், மழைநீர் சேமிப்பு மற்றும் நிலத்தடி நீர் பாதுகாப்பிற்காக, குடிநீர் வடிகால் வாரியத்தின் வாயிலாக, 9 லட்சம் ரூபாயில், 20மீ. அகலம், ஒரு மீ. உயரத்தில் கால்வாயின் குறுக்கே சிறிய தடுப்பணை அமைக்கப்பட்டது.
தொடர் பராமரிப்பு இல்லாததால், தடுப்பணையின் பக்கவாட்டு சுவர்கள் உடைந்து கால்வாயில் விழுந்தன. மண் அரிப்பை தடுக்க பதிக்கப்பட்ட கற்களும் சரிந்தன. தடுப்பணை கான்கிரீட் சுவர் முழுதும் சேதமாகின.
இதனால் மழைக்காலங்களில் தடுப்பணையில் மழைநீர் தேக்கி வைக்க முடியாத நிலை உள்ளது. தற்போது பெய்து வரும் மழைக்கு கால்வாயில் நீர்வரத்து இருக்கிறது. அதேசமயம் சேதம் அடைந்த தடுப்பணை வழியாக மழைநீர் ஆரணி ஆற்றிற்கு செல்கிறது.
தடுப்பணை சேதம் அடைந்து இருப்பதால், அவற்றை தேக்கி வைத்து நிலத்தடி நீரை பாதுகாக்க முடியாத அவல நிலை ஏற்பட்டு உள்ளது. மழைநீர் சேமிப்பு, நிலத்தடி நீர் பாதுகாப்பிற்காக செலவிட்டப்பட்ட நிதி வீணாகி உள்ளது.
தடுப்பணையை சீரமைத்து இனிவரும் காலங்களிலாவது மழைநீரை சேமித்து வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

