/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
உப்பளத்தில் தடுப்பணை சேதம் நிலத்தடிநீர் பாதிக்கும் அபாயம்
/
உப்பளத்தில் தடுப்பணை சேதம் நிலத்தடிநீர் பாதிக்கும் அபாயம்
உப்பளத்தில் தடுப்பணை சேதம் நிலத்தடிநீர் பாதிக்கும் அபாயம்
உப்பளத்தில் தடுப்பணை சேதம் நிலத்தடிநீர் பாதிக்கும் அபாயம்
ADDED : ஜூன் 06, 2025 02:36 AM

பொன்னேரி:பொன்னேரி அடுத்த கூடுவாஞ்சேரி கிராமத்தில் இருந்து உப்பளம், மடிமைகண்டிகை, வீரங்கிமேடு வழியாக, வஞ்சிவாக்கம் மற்றும் ஆனாசபூதுார் ஏரிக்கு செல்லும் மடுவு உள்ளது.
இதில், உப்பளம் கிராமத்தில் மழைநீரை சேமித்து வைக்கவும், நிலத்தடி நீரை பாதுகாக்கவும், மடுவின் குறுக்கே தடுப்பணை அமைக்கப்பட்டது. இங்கு தேங்கும் மழைநீர் விவசாயத்திற்கும் பயன்பட்டது.
இந்நிலையில், தடுப்பணை தொடர் பராமரிப்பு இல்லாததால், ஆங்காங்கே சேதமடைந்தது. கான்கிரீட் கட்டுமானங்கள் சிதைந்து, சரிவுகளில் பதிக்கப்பட்ட கற்கள் சரிந்தன.
தடுப்பணையின் பல்வேறு பகுதிகளில் ஓட்டைகள் ஏற்பட்டுள்ளன.இதனால், மழைக்காலங்களில் மழைநீரை தேக்கி வைக்க முடியாத நிலை ஏற்படுகிறது.
தற்போதும், தடுப்பணை தண்ணீரின்றி வறண்டுள்ளது. எனவே, மழைநீர் சேமிப்பு மற்றும் நிலத்தடி நீர் பாதுகாப்பு கருதி, தடுப்பணையை சீரமைத்து உரிய முறையில் பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.