/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
செங்குன்றம் சாலை சேதம் வாகன ஓட்டிகளுக்கு சிரமம்
/
செங்குன்றம் சாலை சேதம் வாகன ஓட்டிகளுக்கு சிரமம்
ADDED : அக் 21, 2025 11:16 PM

திருவள்ளூர்: திருவள்ளூர் - செங்குன்றம் சாலை சேதமடைந்துள்ளதால், வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
திருவள்ளூர் - செங்குன்றம் சாலையில், தினமும் 10,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. ஸ்ரீபெரும்புதுாரில் இருந்து வடமாநிலங்களுக்கு செல்லும் கனரக வாகனங்கள், இச்சாலையில் அதிகளவில் பயணிக்கின்றன.
சில நாட்களாக திருவள்ளூர் மாவட்டத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. கனமழை மற்றும் கனரக வாகனங்கள் சென்று வருவதால், இச்சாலை பல இடங்களில் சேதமடைந்துள்ளது. குறிப்பாக, ஈக்காடு, ஈக்காடுகண்டிகை, தாமரைப்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சாலை சேதமடைந்துள்ளது.
சேதமடைந்த இடத்தில், ஜல்லிக் கற்கள் சிதறி கிடப்பதால், இருசக்கர வாகனத்தில் பயணிப்போர், தடுமாறி கீழே விழுந்து வருகின்றனர். இதன் காரணமாக, இச்சாலையில் பயணிப்போர் அச்சத்துடனேயே சென்று வருகின்றனர்.
எனவே, நெடுஞ்சாலை துறையினர் சேதமடைந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.