/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
நாய் குறுக்கே வந்ததால் சிறுவன் பலி
/
நாய் குறுக்கே வந்ததால் சிறுவன் பலி
ADDED : அக் 21, 2025 11:15 PM

ஆவடி: திருவேற்காடு, சுந்தர சோழபுரம், சோழா கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமணன், 45; தனியார் நிறுவன மேலாளர். இவரது மகன் தர்ஷன், 16; பிளஸ் 1 மாணவர்.
இவர், நேற்று முன்தினம் தீபாவளியன்று, நண்பர்களை வீட்டில் விடுவதற்காக, 'ஹோண்டா ஆக்டிவா' ஸ்கூட்டரில் பட்டாபிராம் சென்று உள்ளார்.
அங்கு, நண்பர்களை இறக்கிவிட்டு, மீண்டும் கண்ணப்பாளையம் -- சோராஞ்சேரி சாலை வழியாக, நேற்று முன்தினம் நள்ளிரவு வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது, திடீரென நாய் குறுக்கே வந்ததால், தர்ஷன் ஸ்கூட்டரில் இருந்து கீழே விழுந்துள்ளார்.
இதில், பலத்த காயம் அடைந்த தர்ஷன், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து வந்த ஆவடி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், தர்ஷனின் உடலை மீட்டு, வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.