/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
நுாலகத்திற்கு செல்லும் சாலை சேதம் கே.ஜி.கண்டிகையில் அவலம்
/
நுாலகத்திற்கு செல்லும் சாலை சேதம் கே.ஜி.கண்டிகையில் அவலம்
நுாலகத்திற்கு செல்லும் சாலை சேதம் கே.ஜி.கண்டிகையில் அவலம்
நுாலகத்திற்கு செல்லும் சாலை சேதம் கே.ஜி.கண்டிகையில் அவலம்
ADDED : அக் 27, 2024 01:22 AM

திருத்தணி:திருத்தணி ஒன்றியம் கே.ஜி.கண்டிகை அரசு மேல்நிலைப் பள்ளி எதிரில் கிளை நுாலகம், வருவாய் ஆய்வாளர் அலுவலகம் மற்றும் கல்கி நகர் ஆகியவை உள்ளன. கல்கிநகரில் , 150க்கும் மேற்பட்ட, குடும்பத்தினர் வசிக்கின்றனர்.
கே.ஜி.கண்டிகை பேருந்து நிறுத்தம் மற்றும் அரசு மேல்நிலைப் பள்ளி ஆகிய பகுதிகளில் இருந்து நுாலகம், கல்கி நகருக்கு செல்லும் சிமென்ட் சாலை முறையாக பராமரிக்காததால் குண்டும், குழியுமாக மாறியுள்ளன.
இதனால் மழை பெய்தால், சாலையில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. நுாலகத்திற்கு வரும் வாசகர்கள், வருவாய் ஆய்வாளர் அலுவலகத்திற்கு செல்லும் பயனாளிகள் மற்றும் கல்கி நகருக்கு செல்லும் மக்கள் சிரமப்படுகின்றனர்.
குறிப்பாக இரு சக்கர வாகன ஓட்டிகள் இச்சாலை வழியாக செல்லும் போது அடிக்கடி தவறி விழுந்து காயம் அடைகின்றனர். தற்போது ஊராட்சி நிர்வாகம், சாலையை சீரமைக்காமல், வீடுகளின் கழிவுகளை கொட்டியுள்ளதால் அவ்வழியாக இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் மற்றும் நடந்து செல்பவர்கள் சிரமப்படுகின்றனர்.
எனவே மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்கின்றனர்.