/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மீஞ்சூர் சாலையில் தடுப்புகள் சேதம் செடிகள் வளர்ந்திருப்பதால் அச்சம்
/
மீஞ்சூர் சாலையில் தடுப்புகள் சேதம் செடிகள் வளர்ந்திருப்பதால் அச்சம்
மீஞ்சூர் சாலையில் தடுப்புகள் சேதம் செடிகள் வளர்ந்திருப்பதால் அச்சம்
மீஞ்சூர் சாலையில் தடுப்புகள் சேதம் செடிகள் வளர்ந்திருப்பதால் அச்சம்
ADDED : ஏப் 21, 2025 02:34 AM

பொன்னேரி:பொன்னேரி அடுத்த திருப்பாலைவனம் - மீஞ்சூர் மாநில நெடுஞ்சாலையில் வஞ்சிவாக்கம், தத்தமஞ்சி, காட்டூர், திருவெள்ளவாயல் என, 30க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.
சென்னையில் இருந்து பழவேற்காடு செல்வோரும், இச்சாலையை பயன்படுத்துகின்றனர். இந்நிலையில், இந்த சாலையில் தத்தமஞ்சி, காட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் சாலையோரங்களில் அமைக்கப்பட்ட இரும்பு தடுப்புகள் வாகனங்கள் மோதி சேதமடைந்து உள்ளன. கழன்று விழுந்த இரும்பு தளவாடங்களும் மாயமாகி வருகின்றன.
மேலும், சாலையின் இருபுறமும் முள்செடிகள் வளர்ந்து, சாலை வரை நீட்டிக் கொண்டிருக்கின்றன. இவை, தலைகவசம் இன்றி பயணிப்போரின் முகங்களை பதம்பார்க்கின்றன.
இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:
சாலையின் வளைவு பகுதிகளில் முள்செடிகள் இருப்பதால், அவற்றை தவிர்க்க வலதுபுறம் நகர்ந்து பயணிக்கும்போது, எதிரில் வரும் வாகனங்கள் தடுமாற்றம் அடைகின்றன. இதனால், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
சாலையோர தடுப்புகள் வாகனங்கள் மோதி சேதமடைந்து உள்ளன. தடுப்புகள் இருந்ததால் மட்டும் பெரிய அளவிலான விபத்துக்கள் தவிர்க்கப்பட்டன. சாலையோர தடுப்புகளை சீரமைக்கவும், முள்செடிகளை அகற்றவும் நெடுஞ்சாலைத் துறையினர் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.