/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சேதமடைந்த புதிய மழைநீர் வடிகால்வாய் சுடுகாட்டிற்கு செல்ல முடியாமல் அவதி
/
சேதமடைந்த புதிய மழைநீர் வடிகால்வாய் சுடுகாட்டிற்கு செல்ல முடியாமல் அவதி
சேதமடைந்த புதிய மழைநீர் வடிகால்வாய் சுடுகாட்டிற்கு செல்ல முடியாமல் அவதி
சேதமடைந்த புதிய மழைநீர் வடிகால்வாய் சுடுகாட்டிற்கு செல்ல முடியாமல் அவதி
ADDED : நவ 02, 2024 02:12 AM

திருத்தணி:திருத்தணி நகராட்சி, பலிஜாதெரு, ராதாகிருஷ்ணன் தெரு, கச்சேரிதெரு, காந்திரோடு, கலைஞர்நகர், முருகப்பநகர் உள்ளிட்ட பகுகளில் 3,500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர்.
இவர்கள், புதிய சென்னை சாலை, நந்தியாற்றின் உயர்மட்ட பாலம் அருகே, இரண்டரை ஏக்கர் பரப்பு நிலத்தை சுடுகாடாக பயன்படுத்தி வருகின்றனர். அங்கு இறந்தவர்களின் சடலங்களை எரிப்பதற்கான தகனமேடை, கைபம்பு உள்ளிட்ட வசதிகளை 3.50 லட்சம் ரூபாயில் நகராட்சி நிர்வாகம், 2013ல் ஏற்படுத்தியது.
சுடுகாடு எரிமேடை அருகே, 15 மாதங்களுக்கு முன் மழைநீர் வடிகால்வாய் அமைக்கப்பட்டது. இங்கு 10 மீட்டர் நீளத்திற்கு 5 லட்சம் ரூபாயில் கான்கீரிட் தளம் போட்டு கால்வாய் கட்டப்பட்டது. தரமாக கட்டப்படாததால், ஐந்து மாதத்திற்கு முன் மழைநீர்கால்வாய் உடைந்து விழுந்தது.
இதனால், இறந்தவர்களின் உடலை சுடுகாட்டிற்கு கொண்டு செல்வதற்கு சிரமம் ஏற்பட்டுள்ளது.
சுடுகாட்டிற்கென தனிப்பாதையும் இதுவரை அமைத்து தரவில்லை.
எனவே, சேதம் அடைந்த மழைநீர் வடிகால்வாயை சீரமைத்து, சுடுகாட்டிற்கு பாதை அமைத்து தர வேண்டும் என, அப்பகுதியினர் எதிர்பார்கின்றனர்.
இது குறித்து நகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:
வெள்ள நிவாரண திட்டத்தின் கீழ், 2023ல் சுடுகாடு அருகே மழைநீர் கால்வாய் தற்காலிகமாக தான் அமைக்கப்பட்டது. தற்போது சேதமடைந்துள்ளதை நகர்மன்ற தலைவர் சரஸ்வதிபூபதி மற்றும் ஆணையர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் கடந்த மூன்று நாட்களுக்கு முன் நேரில் சென்று பார்வையிட்டனர். தற்போது புதியதாக கால்வாய் அமைப்பதற்கு திட்டமதிப்பீடு தயார் செய்து வருகிறோம். ஒரு மாதத்திற்குள் புதிய மழைநீர் கால்வாய் அமைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.