ADDED : மே 08, 2025 03:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கும்மிடிப்பூண்டி:கவரைப்பேட்டை அடுத்த, ஏ.என்.குப்பம் கிராமத்தில், ஆரணி ஆற்றின் குறுக்கே அணைக்கட்டு உள்ளது. கடந்த ஆண்டு மழைக்காலத்தின் போது, அணைக்கட்டு பகுதியில், 2,000 மணல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டன.
பயன்பாடின்றி போனதால், அந்த மணல் மூட்டைகள் அங்கேயே உள்ளன. ஐந்து மாதங்கள் அப்படியே இருந்ததால், சில மூட்டைகள் கிழிந்து அதில் இருந்த மணல் சிதறி கிடக்கின்றன.
அனைத்தும் வீணாகும் முன், தார்ப்பாய் மூடி பாதுகாக்க, நீர்வளத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.