ADDED : ஜன 11, 2025 11:40 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம், ராமாபுரம் ஊராட்சிக்கு உட்பட்டது ராமாபுரம் காலனி. இங்கு, இலுப்பூர் செல்லும் சாலையில் அமைந்துள்ளது அரசு துவக்கப் பள்ளி. இங்கு 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
இந்த பள்ளி வளாகத்தை சுற்றி, 20 ஆண்டுகளுக்கு முன் சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது ஒருபக்கம் சுற்றுச்சுவரின்றியும் பல இடங்களில் சேதமடைந்து விழும் நிலையிலும் உள்ளது.
மேலும், பள்ளி மாணவர்கள் விளையாடும் போது, கால்நடைகள் உள்ளே வரும் நிலை உள்ளதால் பெற்றோர் அச்சம் தெரிவிக்கின்றனர்.
எனவே, பள்ளி வளாகத்தில் சேதமடைந்த நிலையில் உள்ள சுற்றுச்சுவரை அகற்றி, புதிதாக அமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.