/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சேதமடைந்த திருப்பாலைவனம் கால்வாய் தடுப்பணை
/
சேதமடைந்த திருப்பாலைவனம் கால்வாய் தடுப்பணை
ADDED : மே 08, 2025 03:08 AM

பொன்னேரி:பொன்னேரி அடுத்த, திருப்பாலைவனம் கிராமத்தில் இருந்து, தொட்டிமேடு, அவரிவாக்கம், வழியாக பழவேற்காடு ஏரிக்கு மழைநீர் கொண்டு செல்லும் கால்வாய் உள்ளது.
மழைக்காலங்களில் கால்வாயில் தேங்கும் மழைநீர் அருகில் உள்ள விவசாய நிலங்களின் பாசனத்திற்கு பயன்படுகிறது.
அதேசமயம், கால்வாயில் நீர்வரத்து குறையும்போது, பழவேற்காடு ஏரியின் உவர்ப்பு நீர் பின்னோக்கி பயணித்து, தேங்கியிருக்கும் நன்னீருடன் கலந்து விடுகிறது.
இதனால் உவர்ப்பு நீர் கலந்து நன்னீரும் உவர்ப்பாக மாறுவதால், அதை விவசாயத்திற்கு பயன்படுத்த முடியாத நிலைஏற்படுகிறது.
இதைத் தவிர்க்கவும், மழைநீரை சேமிக்கவும் திருப்பாலைவனம் - தொட்டிமேடு கிராமங் களுக்கு இடையே, எட்டு ஆண்டுகளுக்கு முன் மேற்கண்ட கால்வாயின் குறுக்கே சிறிய தடுப்பணை அமைக்கப்பட்டது. இது தரமற்ற முறையில் அமைக்கப்பட்டதால், ஒரே ஆண்டில் உடைந்து சேதமானது.
அடுத்தடுத்த ஆண்டுக ளில் தடுப்பணை சுவர்கள் முழுதும் சேதம் அடைந்தது. இதனால் மழைக்காலங்களில் தடுப்பணையில் மழைநீர் தேங்காமல் உடைப்புகள் வழியாக வெளியேறி வீணாகிறது.
தற்போதும், அதே நிலைதான் தொடர்வதால் விவசாயிகள் பாசன வசதி பெற முடியாமல் தவிக்கின்றனர்.
மேற்கண்ட கால்வாய் தடுப்பணை முற்றிலும் சேதம் அடைந்த நிலையில், அதை முழுமையாக இடித்து அகற்றிவிட்டு, அங்கு புதிய தடுப்பணை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.