/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
துார்வாராத கழிவுநீர் கால்வாயால் அபாயம்
/
துார்வாராத கழிவுநீர் கால்வாயால் அபாயம்
ADDED : அக் 19, 2025 10:19 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாலங்காடு: காபுலகண்டிகை கிராமத்தில் கழிவுநீர் கால்வாய் பராமரிப்பின்றியும், துார்வாராமலும் உள்ளதால், தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
திருவாலங்காடு ஒன்றியம் மணவூர் ஊராட்சியில் காபுலகண்டிகை கிராமம் உள்ளது. இங்குள்ள சக்தி விநாயகர் கோவில் தெருவில், கழிவுநீர் செல்ல கால்வாய் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இக்கால்வாய் பல மாதங்களாக பராமரிப்பின்றி உள்ளது.
இதனால், கால்வாயில் செடிகள் வளர்ந்து, கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசி வருகிறது. தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, கழிவுநீர் கால்வாயை துார்வாரி சீரமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.