/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
நிரம்பிய லட்சுமிபுரம் அணைக்கட்டு கரையோர கிராமங்கள் கண்காணிப்பு
/
நிரம்பிய லட்சுமிபுரம் அணைக்கட்டு கரையோர கிராமங்கள் கண்காணிப்பு
நிரம்பிய லட்சுமிபுரம் அணைக்கட்டு கரையோர கிராமங்கள் கண்காணிப்பு
நிரம்பிய லட்சுமிபுரம் அணைக்கட்டு கரையோர கிராமங்கள் கண்காணிப்பு
ADDED : அக் 19, 2025 10:22 PM

பொன்னேரி: கனமழையால் ஆரணி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து, லட்சுமிபுரம் அணைக்கட்டு நிரம்பி வழியும் நிலையில், கரையோர கிராமங்களில் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
பொன்னேரி ஆரணி ஆற்றில், ஒரு மாதமாக அவ்வப்போது பெய்த மழையால், ஆற்றில் தண்ணீர் படிப்படியாக உயர்ந்து வந்தது.
நேற்று முன்தினம் பொன்னேரி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில், நான்கு மணி நேரத்தில், 14 செ.மீ., மழை பெய்தது.
இந்த கனமழையின் காரணமாக, ஆரணி ஆற்றிற்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. லட்சுமிபுரம் அணைக்கட்டு நிரம்பி, விநாடிக்கு, 820 கனஅடி உபரிநீர் வெளியேறி, கடலுக்கு சென்று கொண்டிருக்கிறது.
இதை தொடர்ந்து, இருபுறமும் உள்ள ஷட்டர்கள் திறக்கப்பட்டு, விநாடிக்கு 200 கனஅடி தண்ணீர் பெரும்பேடு, காட்டூர் ஏரிகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது.
நீர்வளத்துறையினர், கரையோர பகுதிகளில், 3,500 மணல் மூட்டைகளை தயார் நிலையில் வைத்துள்ளனர். ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து, இருகரைகளை தொட்டு பயணிப்பதால், கரையோர கிராமங்கள் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது.