/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சென்னை - திருப்பதி சாலையில் நிறுத்தும் வாகனங்களால் அபாயம்
/
சென்னை - திருப்பதி சாலையில் நிறுத்தும் வாகனங்களால் அபாயம்
சென்னை - திருப்பதி சாலையில் நிறுத்தும் வாகனங்களால் அபாயம்
சென்னை - திருப்பதி சாலையில் நிறுத்தும் வாகனங்களால் அபாயம்
ADDED : மார் 30, 2025 12:47 AM

திருத்தணி:சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில், 24 மணி நேரமும் வாகனங்கள் சென்று கொண்டிருக்கும். குறிப்பாக, சென்னை, திருவள்ளூர் மார்க்கம் மற்றும் புத்துார் ரேணிகுண்டா, திருப்பதி மார்க்கத்தில் அதிகளவில் கார், வேன் மற்றும் பேருந்துகள் செல்லும்.
இதுதவிர, கனரக வாகனங்களும், சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் செல்கிறது. இந்நிலையில், திருத்தணி ஆர்.டி.ஓ., மற்றும் தாசில்தார் அலுவலகம் செல்லும் நுழைவு பகுதியில், நெடுஞ்சாலையின் இருபுறமும் லாரிகள் மற்றும் கனரக வாகனங்களை நிறுத்திவிட்டு, ஓட்டுனர்கள் மணிக்கணக்கில் ஓய்வெடுக்கின்றனர்.
இதனால், அப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துக்கள் ஏற்படுகின்றன. சாலையின் இருபுறமும் நிறுத்தப்படும் வாகனங்கள் மீது போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்காமல் மெத்தனம் காட்டி வருவதால், நாளுக்கு நாள் வாகனங்கள் நிறுத்தும் எண்ணிக்கை உயர்ந்து வருகின்றன.
எனவே, அசம்பாவிதங்கள் ஏற்படும் முன், போலீசார் மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் நிறுத்தப்படும் வாகனங்கள் மீது அபராதம் விதிப்பதுடன், பறிமுதல் செய்ய வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.