/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தடுப்புகளின்றி குட்டை மருதவல்லிபுரத்தில் ஆபத்து
/
தடுப்புகளின்றி குட்டை மருதவல்லிபுரத்தில் ஆபத்து
ADDED : ஜன 20, 2025 11:48 PM

திருவாலங்காடு,
திருவாலங்காடு ஒன்றியம், தொழுதாவூர் ஊராட்சிக்கு உட்பட்டது மருதவல்லிபுரம் கிராமம். இங்கிருந்து, மணவூர் செல்லும் தார்ச்சாலை, ஆறு மாதத்திற்கு முன், கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தில், 1 கோடியே, 50 லட்சம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டது.
இங்கு குட்டை அருகே, 50 மீட்டர் தார்ச்சாலை அமைக்கும் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளதுடன், தடுப்புகள் ஏதும் அமைக்கவில்லை.
இதனால் சாலையில் இருந்து, 10 அடி ஆழமுள்ள குட்டையில் வாகன ஓட்டிகள் தவறி விழுந்தால், உயிரிழக்கும் அபாயம் உள்ளதால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் செல்கின்றனர்.
எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, சாலையை விரைந்து அமைப்பதுடன், குட்டை பகுதியில் வாகன ஓட்டிகள் பாதுகாப்பாக செல்ல தடுப்பு அமைக்க வேண்டும் என, எதிர்பார்க்கின்றனர்.
இதுகுறித்து, கிராம சாலைகள் மேம்பாட்டுத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'சாலையை விரைந்து அமைத்து, குட்டை உள்ள பகுதியில் தடுப்பு அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.