/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
காதுகேளாதோர் செஸ்: 80 பேர் உற்சாகம்
/
காதுகேளாதோர் செஸ்: 80 பேர் உற்சாகம்
ADDED : நவ 03, 2025 10:33 PM
சென்னை:  மாநில அளவில் காதுகேளாதோருக்கான சதுரங்க போட்டியில், பல்வேறு மாவட்டங்களில் இருந்து, 80 பேர் உற்சாகமாக பங்கேற்று, தங்கள் திறமையை வெளிப் படுத்தினர்.
வேலுார் மாவட்ட காதுகேளாதோர் சங்கம் ஆதரவில், தமிழ்நாடு காதுகேளாதோர் சதுரங்க சங்கம் சார்பில், 11வது மாநில காதுகேளாதோருக்கான ஓபன் சதுரங்க போட்டி, வேலுார் மாவட்டம், காட்பாடியில் சமீபத்தில் நடந்தது.
போட்டியில், பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த, 80க்கும் மேற்பட்டோர் தங்கள் திறமையை வெளிப்படுத்தினர். இதில், 18 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் உட்பட்ட இருபாலருக்கும் தனித்தனியாக நடக்கின்றன.
ஆண்கள் பிரிவில், நாகர்கோவிலைச் சேர்ந்த சிவராஜ், மதுரை அழகுராஜா, தேனி கவியரசன்; பெண்களில் ஈரோடு கலைசெல்வி, மதுரை நாகேஸ்வரி ஆகியோர் வெற்றி பெற்றனர்.
மாணவரில் வேலுாரை சேர்ந்த சந்தோஷ், ஜெகதீஷ், சதீஷ்; மாணவியரில் வேலுாரைச் சேர்ந்த துஷ்மித்தா, சவுந்தரியா, கீர்த்தனா ஆகியோர் வெற்றி பெற்றனர்.

