/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மயங்கி விழுந்து தனி தாசில்தார் மரணம்
/
மயங்கி விழுந்து தனி தாசில்தார் மரணம்
ADDED : நவ 01, 2024 08:45 PM
திருவள்ளூர்:அரியலூர் மாவட்டம், செந்தூரை தாலுகா சன்னாசிநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர், மணிகண்டன்,49. இவர், திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தாசில்தாராக பணியாற்றினார். மூன்று மாதங்களுக்கு முன், திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சென்னை வெளிவட்ட சாலை பிரிவு தனி தாசில்தாராக பணியிடம் மாற்றப்பட்டார். இவர் திருவள்ளூரில் தங்கியிருந்து, பணியாற்றி வந்தார்.
கடந்த புதன்கிழமை தீபாவளிக்காக சொந்த ஊரான அரியலுாருக்கு மணிகண்டன் சென்றார். அங்கு நேற்று முன்தினம், தீபாவளி கொண்டாட்டத்தில் திடீரென மயங்கி விழுந்துள்ளார். உடனே உறவினர்கள் திருச்சியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு பரிசோதனை மருத்துவர் நெஞ்சுவலியால் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார். அரியலுார் போலீசார் விசாரித்து வருகின்றனர். மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் தனிதாசில்தார் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்