/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பொதட்டூரில் தம்பதிக்கு கொலை மிரட்டல்
/
பொதட்டூரில் தம்பதிக்கு கொலை மிரட்டல்
ADDED : ஆக 10, 2025 12:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொதட்டூர்பேட்டை:பொதட்டூர்பேட்டை, அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் கீர்த்தி, 19. இவர், நேற்று முன்தினம், அவரது கணவர் சிவகிரியுடன், தன் தாய் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது, அதே பகுதியை சேர்ந்த சற்குணம், 48, அவரது மனைவி லட்சுமி, 43, மகன் அஜித்குமார், 25, மற்றும் சக்திவேல், 31, ஆகியோர் வழிமறித்து, முன்விரோதம் காரணமாக கொலை மிரட்டல் விடுத்தனர்.
இது குறித்து, பொதட்டூர்பேட்டை போலீசில், கீர்த்தி அளித்த புகாரின்படி, கொலை மிரட்டல் விடுத்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.