/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஊத்துக்கோட்டை -- பெரிஞ்சேரி 4 வழிச்சாலையாக மாற்ற முடிவு
/
ஊத்துக்கோட்டை -- பெரிஞ்சேரி 4 வழிச்சாலையாக மாற்ற முடிவு
ஊத்துக்கோட்டை -- பெரிஞ்சேரி 4 வழிச்சாலையாக மாற்ற முடிவு
ஊத்துக்கோட்டை -- பெரிஞ்சேரி 4 வழிச்சாலையாக மாற்ற முடிவு
ADDED : செப் 18, 2024 09:08 PM
ஊத்துக்கோட்டை:ஊத்துக்கோட்டை -- திருவள்ளூர் மாநில நெடுஞ்சாலையில், போந்தவாக்கம், கச்சூர், பெரிஞ்சேரி, சீத்தஞ்சேரி, ஒதப்பை, பூண்டி உள்ளிட்ட ஊராட்சிகள் உள்ளன. மேலும், இணைப்பு சாலை வாயிலாக, 30க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.
திருவள்ளூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஆந்திர மாநிலம், சத்தியவேடு, தடா, வரதயபாளையம், காளஹஸ்தி மற்றும் நாகலாபுரம், பிச்சாட்டூர் உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல ஊத்துக்கோட்டை வழியாக செல்ல வேண்டும்.
அதேபோல், ஊத்துக்கோட்டை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து, திருவள்ளூரில் உள்ளிட்ட அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு, இச்சாலை வழியே செல்ல வேண்டும்.
இச்சாலை வழியாக தினமும், 10,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. ஆனால், இரு வழிச்சாலையாக இருப்பதால், வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
இதில், ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் உள்ள திருவள்ளூர் சாலையில், மின்வாரியம், அரசு மற்றும் தனியார் மேல்நிலைப் பள்ளிகள் உள்ளிட்டவை உள்ளன.
இங்கு வருவோர் வாகனங்களை சாலையில் நிறுத்துவதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. முதற்கட்டமாக பெரிஞ்சேரி -- ஊத்துக்கோட்டை இடையே, 2.6 கி.மீட்டர் துார இருவழிச்சாலையை, நான்கு வழிச்சாலையாக மாற்ற மாநில நெடுஞ்சாலைத் துறை கருத்துரு தயார் செய்து, அரசுக்கு அனுப்பி வைத்துள்ளது.