/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
400 மின்கம்பங்கள் பழுது விரைவில் மாற்ற முடிவு
/
400 மின்கம்பங்கள் பழுது விரைவில் மாற்ற முடிவு
ADDED : செப் 11, 2025 09:52 PM
திருத்தணி:'திருத்தணி கோட்டத்தில் பழுதடைந்த மின்கம்பங்களை கண்டறிந்து, முதற்கட்டமாக 400 புதிய மின்கம்பங்கள் நடப்படும்' என, மின்நுகர்வோர் குறைதீர் கூட்டத்தில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருத்தணி - அரக்கோணம் மாநில நெடுஞ்சாலையில் இயங்கி வரும் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில், மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம், மின்வாரிய பொறியாளர் சேகர் தலைமையில் நேற்று நடந்தது.
இதில், மின்மாற்றி பழுதாகி ஒரு மாதமாகியும் சீரமைக்கவில்லை. அகூர் கிராமத்தில் உள்ள ஐந்து கோவில்களின் மின் இணைப்பு பெயரை, ஹிந்து அறநிலையத் துறையின் பெயரில் மாற்றி தரவேண்டும்.
மேலும், அத்திமாஞ்சேரி மற்றும் திருத்தணி விவசாயிகள், விவசாய கிணறுகளுக்கு விரைந்து மின் இணைப்பு வழங்க வேண்டும் என, கோரிக்கை மனு அளித்தனர்.
அதன்பின், மின்வாரிய பொறியாளர் சேகர் கூறியதாவது:
திருத்தணி வருவாய் கோட்டத்தில் பழுதடைந்த மின்கம்பங்கள் குறித்து கணக்கெடுத்து வருகிறோம். முதற்கட்டமாக, திருத்தணி மற்றும் கே.ஜி.கண்டிகை துணை மின்நிலைய எல்லைக்குள், பழுதடைந்த 400 மின்கம்பங்களுக்கு பதிலாக, அதே இடத்தில் புதிய மின்கம்பங்கள் விரைவில் பொருத்தப்படும்.
இதுதவிர, விவசாயிகளுக்கு சீரான மும்முனை மின்சாரம் வழங்க பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.