/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
'சர்வர்' பிரச்னையால் பத்திரப்பதிவு பாதிப்பு: பொன்னேரியில் மக்கள் தவிப்பு

UPDATED : டிச 25, 2025 08:08 AM
ADDED : டிச 25, 2025 06:53 AM
பொன்னேரி: பொன்னேரி சார் - பதிவாளர் அலுவலகத்தில், 'சர்வர்' பிரச்னையால், பத்திரப்பதிவுகள் சரிவர நடைபெறாமல், பொதுமக்கள் கடும் அவதிப்பட்டனர்.
பொன்னேரி சார் - பதிவாளர் அலுவலகத்தில், தினமும் 80 - 120 பத்திரப்பதிவுகள் நடைபெறுகின்றன.
மேலும், வில்லங்க சான்று, நகல் பத்திரம் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கும், பொதுமக்கள் சார் - பதிவாளர் அலுவலத்தை நாடுகின்றனர்.
இங்குள்ள கணினி 'சர்வர்' சரிவர செயல்படாமல், அவ்வப்போது பழுதாகி விடுகிறது. இதனால், பத்திரப்பதிவு செய்ய வருவோர், நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை உள்ளது. ஆன்லைனில் பத்திரப்பதிவிற்கு விண்ணப்பித்து அலுவலகம் வந்தால், சர்வர் பிரச்னை காரணமாக, அடுத்தடுத்து நாட்களில் வரும்படி வாங்குபவர், விற்பனை செய்பவர்கள் அலைகழிக்கப்படுகின்றனர்.
ஒரு சில வருவாய் கிராமங்கள், பத்திரப்பதிவு செய்ய முடியாத நிலையும் உள்ளது. கேட்டால் தமிழகம் முழுதும் பத்திரவுப்பதிவு அலுவலங்களில், இதே நிலை தான் இருப்பதாக அலுவலர்கள் கூறுகின்றனர்.
பத்திரவுப்பதிவு அலுவலக சர்வரில் ஏற்படும் பிரச்னைகளை உடனுக்குடன் சரிசெய்து, பொதுமக்கள் அலைக்கழிப்பை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.