/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தண்ணீர் தேடி வந்த மான் கான்கிரீட் தூணில் மோதி பலி
/
தண்ணீர் தேடி வந்த மான் கான்கிரீட் தூணில் மோதி பலி
ADDED : ஏப் 25, 2025 02:22 AM

திருவாலங்காடு:கோடை வெயில் வாட்டி வரும் நிலையில், ஆந்திர வனப்பகுதியில் இருந்து தண்ணீர் மற்றும்இரைத்தேடி, தமிழக எல்லையில் அமைந்துள்ளதிருவாலங்காடு ஒன்றியத்திற்கு உட்பட்ட அரும்பாக்கம், நெமிலி, சிவாடா உள்ளிட்ட கிராமங்களுக்குமான்கள் வந்து செல்கின்றன.
நேற்று, திருவலாங் காடு ஒன்றியம் அரும் பாக்கம் ஊராட்சி தன்ராஜ் கண்டிகை கிராமத்தில் உள்ள மாந்தோப்பில், ஆண் மான் ஒன்று தண்ணீர் தேடி வந்தது. மக்கள் நடமாட்டத்தை கண்டவுடன் வேகமாக ஓடிய மான், சுற்றுச்சுவருக்காக போடப்பட்டிருந்த கான்கிரீட் துணில் மோதி படுகாயமடைந்தது.
இதை பார்த்த பகுதிவாசிகள், திருத்தணி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் வர தாமதமானதால், மான் பரிதாபமாக உயிரிழந்தது. அதன்பின் வந்த திருத்தணி வனத்துறையினர், உயிரிழந்த மானை மீட்டு, திருத்தணி கால்நடை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்து, வனப்பகுதி அருகே புதைத்தனர்.
திருத்தணி கோட்டத்தில் கோடை வெயிலில் தண்ணீரை தேடி வழி மாறி வரும் மான்களை, நாய்கள் கடித்தும், விபத்தில் சிக்கியும் உயிரிழப்பது அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் திருத்தணியில் நாய் கடித்து குதறியதில் மான் ஒன்று உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.