/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
நெல் ஏற்றி செல்லும் லாரிகள் வருவதில் தாமதம்: விவசாயிகள் காத்திருக்கும் அவலம்
/
நெல் ஏற்றி செல்லும் லாரிகள் வருவதில் தாமதம்: விவசாயிகள் காத்திருக்கும் அவலம்
நெல் ஏற்றி செல்லும் லாரிகள் வருவதில் தாமதம்: விவசாயிகள் காத்திருக்கும் அவலம்
நெல் ஏற்றி செல்லும் லாரிகள் வருவதில் தாமதம்: விவசாயிகள் காத்திருக்கும் அவலம்
ADDED : அக் 05, 2025 01:18 AM

திருவாலங்காடு:திருத்தணி கோட்டத்தில் நெல் ஏற்றிச் செல்லும் லாரிகள் வர தாமதமாவதால், கொள்முதல் நிலையங்களில் டிராக்டரில் நெல்லுடன் விவசாயிகள் காத்திருக்கின்றனர்.
திருத்தணி வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட திருவாலங்காடு, திருத்தணி, ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு, பொதட்டூர்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில், 10,000 ஏக்கரில் விவசாயிகள் நெல் பயிரிட்டுள்ளனர்.
விவசாயிகள் வசதிக்காக மாவட்ட நிர்வாகம் சார்பில், திருத்தணி தாலுகாவில் கே.ஜி.கண்டிகை, திருத்தணி, நெமிலி, பனப்பாக்கம், கூளூர், பூனிமாங்காடு, பாகசாலை, களாம்பாக்கம் ஆகிய இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.
அதேபோல், ஆர்.கே.பேட்டை தாலுகாவில்- 3, பள்ளிப்பட்டு தாலுகாவில் -3 என, 14 இடங்களில் நெல் கொள்முதல் நிலையம் திறந்து, நெல் கொள்முதல் செய்யப்படுகிறது.
கடந்த சில நாட்களாக கொள்முதல் நிலையங்களில், விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்வது காலதாமதம் ஏற்படுவதாக கூறப்படுகிறது. இதனால், நெல் கொள்முதல் நிலையங்களில் மூட்டைகள் தேங்கியுள்ளதாகவும், இதனால் நெல் ஏற்றி வந்த டிராக்டர்கள் அங்கேயே அணிவகுத்து நிற்கின்றன.
பருவமழை காரணமாக, திருத்தணி சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்து வருவதால், டிராக்டரில் கொண்டு வந்துள்ள நெல் மூட்டைகளை தார்ப்பாய் மூடி விவசாயிகள் பாதுகாத்து வருகின்றனர்.
எனவே, விவசாயிகளின் நலன் கருதி, திருவாலங்காடில் சேமிப்பு கிடங்கு அமைக்க வேண்டும். மேலும், கலெக்டர் பிரதாப் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.