/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
எஸ்.டி., ஜாதி சான்றிதழ் வழங்க தாமதம் பள்ளியில் சேர்க்க முடியாமல் தவிப்பு

ADDED : மே 16, 2025 10:17 PM
திருத்தணி:திருத்தணி ரயில் நிலையம் அருகே, எஸ்.டி., மக்களுக்கு ஜாதி சான்றிதழ், வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.
திருத்தணி வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட பொதட்டூர்பேட்டை, பள்ளிப்பட்டு, கரிம்பேடு உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் காட்டுநாயக்கன் பழங்குடியின மக்களுக்கு ஜாதி சான்றிதழ், வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும்.
பழங்குடியின மக்களுக்கு வழங்கப்படும் அரசு தொகுப்பு வீடுகளின் மதிப்பு 10 லட்சம் ரூபாயாக உயர்த்தி தர வேண்டும். பழங்குடியினர் நலவாரிய அட்டையை வழங்க வேண்டும், அரசு மானியக்கடன் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
பின், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைவரும், திருத்தணி ஆர்.டி.ஓ., கனிமொழியை சந்தித்து, குழந்தைகளுக்கு ஜாதி சான்றிதழ் இல்லாததால் பள்ளியில் சேர்க்க முடியவில்லை என தெரிவித்தனர். மனுவின் மீது விரைந்து நடவடிக்கை எடுப்பதாக ஆர்.டி.ஓ., உறுதியளித்தார்.
இதில், காட்டுநாயக்கன் பழங்குடியின மக்கள் சங்கத்தின் மாநில செயலர் அய்யனார், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநில செயலர் சரவணன் உட்பட, 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.