/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மெட்ரோ ரயில் சேவையை கும்மிடி வரை நீடிக்க கோரிக்கை
/
மெட்ரோ ரயில் சேவையை கும்மிடி வரை நீடிக்க கோரிக்கை
ADDED : ஜன 27, 2025 11:25 PM
மீஞ்சூர், சென்னை - கும்மிடிப்பூண்டி மார்க்க ரயில் பயணியர் சங்கத்தின் ஆலோசனை கூட்டம், நேற்று, மீஞ்சூரில், தலைவர் தீனதயாளன் தலைமையில், செயலர் தனுஷ்கோடி முன்னிலையில் நடந்தது.
கூட்டத்தில், புறநகர் பயணங்களின் போது ஏற்படும் சிரமங்கள் குறித்தும், அது தொடர்பாக சங்கத்தின் வாயிலாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டன.
ஒவ்வொரு ரயில் நிலையத்திற்கும், சங்க நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர். அவர்கள் வாயிலாக அந்தந்த ரயில் நிலையங்களில் உள்ள பிரச்னைகளை தெரிந்து, ரயில்வே நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லவும் முடிவெடுக்கப்பட்டது.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
சென்னை - கும்மிடிப்பூண்டி ரயில் மார்க்கத்தில், 'கொரோனா' காலத்தில், ரத்து செய்யப்பட்ட அனைத்து ரயில்களையும், மீண்டும் இயக்க வேண்டும்.
இது தொடர்பாக சுவரொட்டிகள் அச்சிட்டு அனைத்து ரயில் நிலையங்களிலும் ஒட்டி, ரயில்வே நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்.
ரத்து செய்யப்பட்ட ரயில்களை மீண்டும் இயக்குவது தொடர்பாக எம்.பி., - எம்.எல்.ஏ., ஆகியோரை சந்தித்து மனு அளிக்க வேண்டும். கும்மிடிப்பூண்டி வரை மெட்ரோ ரயில் சேவையை நீடிக்க வேண்டும்.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

