/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கன்டெய்னர் லாரிகளால் தொடரும் நெரிசல் பொன்னேரி நகருக்குள் தடைவிதிக்க கோரிக்கை
/
கன்டெய்னர் லாரிகளால் தொடரும் நெரிசல் பொன்னேரி நகருக்குள் தடைவிதிக்க கோரிக்கை
கன்டெய்னர் லாரிகளால் தொடரும் நெரிசல் பொன்னேரி நகருக்குள் தடைவிதிக்க கோரிக்கை
கன்டெய்னர் லாரிகளால் தொடரும் நெரிசல் பொன்னேரி நகருக்குள் தடைவிதிக்க கோரிக்கை
ADDED : ஏப் 28, 2025 02:12 AM

பொன்னேரி:மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு புதுநகர், காட்டுப்பள்ளி ஆகிய இடங்களில், எண்ணுார் காமராஜர் துறைமுகம் மற்றும் அதானி துறைமுகம் அமைந்து உள்ளது.
வடமாநிலங்களில் இருந்து துறைமுகங்களுக்கு கன்டெய்னர் ஏற்றி செல்லும் லாரிகள், தச்சூர்-, பொன்னேரி -மீஞ்சூர் நெடுஞ்சாலை வழியாக பயணிக்கின்றன.
மேலும், மணலி, வல்லுார், கொண்டக்கரை, எலவம்பேடு, நாலுார் ஆகிய பகுதிகளில் உள்ள கன்டெய்னர் கிடங்குகளுக்கும் சென்று வரும் லாரிகளும் இதே சாலை வழியாக பயணிக்கின்றன.
பொன்னேரி நகரப்பகுதியில் பழைய பேருந்து நிலையம், தாயுமான் செட்டி தெரு, செங்குன்றம் சாலை, புதியதேரடி - திருவொற்றியூர் சாலை சந்திப்பு ஆகிய பகுதிகளில் சாலைகள் குறுகலாக உள்ளன.
கன்டெய்னர் லாரிகள் இந்த பகுதிகளை கடந்து செல்லும்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
அவை எதிர் எதிரே பயணிக்கும்போது ஒன்றுடன் ஒன்று உரசுவதுபோல் செல்வதால், மற்ற வாகன ஓட்டிகள் அச்சத்திற்கு ஆளாகின்றனர்.
தற்போது பொதுமக்கள், மாணவர்கள் நலன்கருதி, தச்சூர்- பொன்னேரி- மீஞ்சூர் சாலையில் காலை, 7:00 முதல் இரவு 9:00 மணி வரை கன்டெய்னர் உள்ளிட்ட கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஆனால் தடையை மீறி கனரக வாகனங்கள் தொடர்ந்து பகல் நேரங்களில் பொன்னேரி நகருக்குள் பயணிப்பதால், போக்குவரத்து நெரிசல் தொடர்கிறது.
இரவு நேரங்களில் கனரக வாகனங்கள் வேகத்தடைகள், பள்ளங்களில் வேகமாக கடக்கும்போது, சாலையை ஒட்டி வசிக்கும் குடியிருப்புவாசிகள் துாக்கம் தொலைத்து தவிக்கின்றனர்.
கன்டெய்னர் லாரிகள் பயணிப்பதற்கு மீஞ்சூர் - வண்டலுார் வெளிவட்ட சாலை இருக்கும் நிலையில், குறிப்பிட்ட நேரத்திற்கு தடை என, இல்லாமல், பொன்னேரி நகருக்குள் அவை நாள்முழுதும் பயணிக்க தடை விதிக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

