/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கால்வாய் ஆக்கிரமிப்பு அகற்ற கோரிக்கை
/
கால்வாய் ஆக்கிரமிப்பு அகற்ற கோரிக்கை
ADDED : செப் 27, 2024 08:03 PM
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கம் எம்.ஜி.ஆர்., நகர் பின்புறம் நாகல் ஏரி உள்ளது. ஒன்றிய பராமரிப்பில் உள்ள ஏரியின் உபரி நீர் கால்வாயில் செல்லும் தண்ணீர், எம்.ஜி.ஆர்., நகர், ஜீவா நகர், கணபதி நகர், நொச்சிக்குப்பம் வழியாக சென்று கடலில் கலக்கிறது.
எம்.ஜி.ஆர்., நகரின் தெற்கு பகுதியில் கால்வாயை ஆக்கிரமித்து தனிநபர் ஒருவர் பாதை அமைத்துள்ளார். இதனால், மழைக்காலத்தில் எம்.ஜி.ஆர்., நகர், ஜீவா நகர் பகுதியில் மழை வெள்ளம் சூழும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.