/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
வனவிலங்கு பட்டியலில் இருந்து காட்டுப்பன்றியை நீக்க வலியுறுத்தல்
/
வனவிலங்கு பட்டியலில் இருந்து காட்டுப்பன்றியை நீக்க வலியுறுத்தல்
வனவிலங்கு பட்டியலில் இருந்து காட்டுப்பன்றியை நீக்க வலியுறுத்தல்
வனவிலங்கு பட்டியலில் இருந்து காட்டுப்பன்றியை நீக்க வலியுறுத்தல்
ADDED : மார் 21, 2025 11:49 PM
திருவாலங்காடு,
திருவள்ளூர் மாவட்டத்தில் கும்மிடிப்பூண்டி, மீஞ்சூர், கடம்பத்தூர், திருவாலங்காடு, திருத்தணி, பள்ளிப்பட்டு உட்பட 14 ஒன்றியங்கள் உள்ளன. மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் நெல், கரும்பு விவசாயம் பிரதானமாக உள்ளது.
தற்போது, விவசாய நிலங்களில் காட்டுப்பன்றிகள் நடமாட்டம் அதிகம் உள்ளன. இனப்பெருக்கத்தால், காட்டுப்பன்றிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், விவசாய பயிர்களை நாசப்படுத்தி விடுகின்றன. இதனால், விவசாயிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
இதுகுறித்து திருவள்ளூர் மாவட்ட கரும்பு விவசாய சங்க செயலர் என்.ஸ்ரீநாத் கூறியதாவது:
மாவட்ட அளவிலான குறைகேட்பில், பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள், இதுதொடர்பாக பேசி உள்ளனர். காட்டுப்பன்றிகள் அட்டகாசம் நாளுக்குநாள் அதிகரித்து விட்டது. எவ்வித பயிர்களும் செய்ய முடியவில்லை.
பன்றிகள், மனிதர்களை கண்டால், துரத்தி துரத்தி தாக்க துவங்கிவிடுகின்றன. இதனால், விவசாயிகள் உயிர் பயத்துடன் வாழ வேண்டியுள்ளது. காட்டுப்பன்றிகளை, வன விலங்கு பட்டியலில் இருந்து நீக்க வேண்டும்.
விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் கட்டுப்படுத்த வேண்டும். காட்டுப்பன்றியை சுட்டுப்பிடிக்க நிர்வாகம் உத்தரவிட வேண்டும். மேலும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.