/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மணவூரில் 'மெமு' விரைவு ரயில் நிறுத்தி இயக்க வலியுறுத்தல்
/
மணவூரில் 'மெமு' விரைவு ரயில் நிறுத்தி இயக்க வலியுறுத்தல்
மணவூரில் 'மெமு' விரைவு ரயில் நிறுத்தி இயக்க வலியுறுத்தல்
மணவூரில் 'மெமு' விரைவு ரயில் நிறுத்தி இயக்க வலியுறுத்தல்
ADDED : டிச 10, 2024 12:59 AM
திருவாலங்காடு,
'மெமு' எனப்படும், குறுகிய துாரம் செல்லும் மின்சார விரைவு ரயில்கள், சென்னையில் இருந்து செங்கல்பட்டு, அரக்கோணம், கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட புறநகர் பகுதிகளுக்கு இயக்கப்படுகின்றன. சென்னையில் இருந்து, அரக்கோணம் வரை தினமும், 150க்கும் மேற்பட்ட, 'மெமு' ரயில்கள் இயக்கப்படுகின்றன.
இங்கு, திருவள்ளூர் அடுத்து அமைந்துள்ள மணவூர் ரயில் நிலையத்தில் இருந்து, 'மெமு' ரயில்களில், தினமும்30,000க்கும் மேற்பட்டோர், கல்வி, வேலை, தொழில் சம்பந்தமாக, சென்னை, அரக்கோணம், திருவள்ளூர் உள்ளிட்ட நகரங்களுக்கு வாயிலாக பயணிக்கின்றனர்.
மணவூர் ரயில் நிலையத்தில் பெரும்பாலான புறநகர் ரயில்கள் நிறுத்தி இயக்கப்படுகின்றன. இந்நிலையில், 'பீக் அவர்ஸ்' எனப்படும் மாலை வேளையில் சென்னையில் இருந்து, மாலை 5:45 மற்றும் 7:30 மணிக்கு இயக்கப்படும், 'மெமு' விரைவு ரயில்கள் மணவூரில் நிறுத்தப்படுவதில்லை.
இதனால் அந்த ரயில்களில் பயணித்து மணவூரில் இறங்க வேண்டிய பயணியர், திருவள்ளூர் அல்லது திருவாலங்காடு ரயில் நிலையத்திற்கு சென்று திரும்பி வர வேண்டிய நிலை உள்ளது.
இதனால், ஒரு மணி நேரம் வரை நேர விரயம் ஏற்படுவதாக பயணியர் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே, மணவூர் ரயில் நிலையத்தில் மேற்கண்ட இரண்டு மெமு விரைவு ரயில்களை நிறுத்தி இயக்க, ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.