/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து கட்டிய கடைகள் இடித்து அகற்றம்
/
புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து கட்டிய கடைகள் இடித்து அகற்றம்
புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து கட்டிய கடைகள் இடித்து அகற்றம்
புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து கட்டிய கடைகள் இடித்து அகற்றம்
ADDED : டிச 12, 2025 06:42 AM

திருத்தணி: திருத்தணி மாநில நெடுஞ்சாலையோரம், சாலை புறம்போக்கு நிலத்தை ஆக்கிமிரத்து கட்டிய, 6 கடைகளை நேற்று வருவாய், நெடுஞ்சாலை துறையினர் இடித்து அகற்றினர்.
திருத்தணி- அரக்கோணம் மாநில நெடுஞ்சாலையில், ஜனவரி மாதம், சாலை விரிவாக்கம் செய்து சிமென்ட் கல் சாலை அமைக்கப்பட்டது.
அப்போது, திருத்தணி அரசு போக்கு வரத்து பணிமனை எதிரே, நெடுஞ்சாலையோரம், தனி நபர்கள் சாலை புறம்போக்கு நிலம், சர்வே எண், 306ல் 1.28 ஏக்கர் பரப்பு நிலத்தை ஆக்கிரமித்து ஆறு கடைகள் கட்டியுள்ளனர்.
கடைகளை அகற்ற நெடுஞ்சாலை துறையினர் முயன்ற போது, கடை உரிமையாளர்கள், கடைகள் அகற்றுவதற்கு தற்காலிக இடைக்கால தடை நீதிமன்றத்தில் வாங்கினர்.
இதை எதிர்த்து திருத்தணி நெடுஞ்சாலை துறையினர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதையடுத்து, நீதிமன்றம் சாலை புறம்போக்கு நிலத்தில் கட்டிய, கடைகளை இடித்து அகற்றலாம் என உத்தரவு பிறப்பித்தது.
நேற்று திருத்தணி வருவாய் துறையினர், நெடுஞ்சாலை துறையினர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பொக்லைன் மூலம் கடைகளை இடித்து அகற்றினர். மீட்கப்பட்ட நிலத்தின் மதிப்பு, 75 லட்சம் ரூபாயாகும் என, வருவாய் துறையினர் தெரிவித்தனர்.

