/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
நடைபாதையில் கடைகளின் படிகள் இடிப்பு பொக்லைன் இயந்திரம் சிறைபிடிப்பு
/
நடைபாதையில் கடைகளின் படிகள் இடிப்பு பொக்லைன் இயந்திரம் சிறைபிடிப்பு
நடைபாதையில் கடைகளின் படிகள் இடிப்பு பொக்லைன் இயந்திரம் சிறைபிடிப்பு
நடைபாதையில் கடைகளின் படிகள் இடிப்பு பொக்லைன் இயந்திரம் சிறைபிடிப்பு
ADDED : நவ 21, 2024 02:49 AM

கும்மிடிப்பூண்டி, நவ. 21--
கும்மிடிப்பூண்டி பஜார் பகுதியில் கடைகளின் படிகளை இடித்த பொக்லைன் இயந்திரத்தை சிறைபிடித்து, நெடுஞ்சாலை துறையினரை கண்டித்து, வியாபாரிகள் ஆர்ப்பாட்டம் செய்தததால் பரபரப்பு ஏற்பட்டது.
கும்மிடிப்பூண்டி பஜார் பகுதி அமைந்துள்ள ஜி.என்.டி., சாலையோர ஆக்கிரமிப்புகளால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. இதனால், கடந்த 16ம் தேதி சாலையோர ஆக்கிரமிப்புகளை, நெடுஞ்சாலை துறையினர் அகற்றினர்.
நேற்று நடைபாதையில் இருந்த கடைகளின் படிகளை இடிக்க பொக்லைன் இயந்திரத்துடன் மாநில நெடுஞ்சாலை துறையினர் சென்றனர். மளிகை கடை மற்றும் அதனருகே இருந்த நகைக்கடை ஒன்றின் படிகளை இடித்தனர்.
அப்போது, கும்மிடிப்பூண்டி வியாபாரிகள் பொக்லைன் இயந்திரத்தை சிறைபிடித்து ஆர்ப்பாட்டம் செய்தனர். அங்கிருந்த நெடுஞ்சாலை துறை ஊழியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
படிகளை இடித்தால் வாடிக்கையாளர்கள் கடைக்கு வருவது எப்படி, கடையில் உள்ள வாடிக்கையாளர்கள் வெளியே செல்வது எப்படி.
ஒரு படியை இடிப்பதால் நெடுஞ்சாலை துறைக்கு என்ன கிடைக்க போகிறது' என, சரமாரியாக கேள்விகளை எழுப்பினர். தகவல் அறிந்து வந்த கும்மிடிப்பூண்டி போலீசார், வியாபாரிகளிடம் பேச்சு நடத்தினர். அதன்பின், பொக்லைன் இயந்திரத்தை திருப்பி அனுப்பினர்.
'வியாபாரிகளும், நெடுஞ்சாலை துறையினரும் கலந்து பேசி சுமுக தீர்வு காணுங்கள்' என, போலீசார் தெரிவித்தனர். அதன்பின், அனைவரும் கலைந்து சென்றனர்.
இந்த சம்பவத்தால், கும்மிடிப்பூண்டி பஜார் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டதுடன், சிறிது நேரம் போக்குவரத்து பாதித்தது.

