/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
டி.எஸ்.பி., அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம்
/
டி.எஸ்.பி., அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம்
ADDED : அக் 26, 2024 07:58 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருத்தணி:திருத்தணி அடுத்த அகூர் காலனி பகுதியை சேர்ந்தவர் மல்லிகா, அவரது மகன் பத்ரி ஆகிய இருவரும் கஞ்சா விற்பனை செய்வதாக, அதே பகுதியை சேர்ந்த பிரபு, அவரது மனைவி இளவேனில், கடந்த, 24ம் தேதி திருத்தணி டி.எஸ்.பி., கந்தனிடம் புகார் கொடுத்தனர்.
இந்நிலையில், நேற்று மல்லிகா, அவரது மகன் பத்ரி, மகள்கள், சிந்து, பிந்து ஆகியோர் மற்றும் உறவினர்கள், திருத்தணி டி.எஸ்.பி., அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கஞ்சா விற்பதாக பொய்யான புகார் கொடுத்த, பிரபு அவரது மனைவி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோஷம் எழுப்பினர்.
திருத்தணி போலீசார் விசாரித்து வருகின்றனர்.