/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஆதிதிராவிடர் குடியிருப்பில் ரூ.4 கோடியில் மேம்பாட்டு பணி
/
ஆதிதிராவிடர் குடியிருப்பில் ரூ.4 கோடியில் மேம்பாட்டு பணி
ஆதிதிராவிடர் குடியிருப்பில் ரூ.4 கோடியில் மேம்பாட்டு பணி
ஆதிதிராவிடர் குடியிருப்பில் ரூ.4 கோடியில் மேம்பாட்டு பணி
ADDED : மார் 15, 2024 08:05 PM
திருவள்ளூர்:தமிழகத்தில், ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த, அயோத்திதாஸ் பண்டிதர் குடியிருப்பு மேம்பாட்டு திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது. இங்கு, அடிப்படை வசதியை ஐந்து ஆண்டுக்குள் செயல்படுத்த, ஆண்டுக்கு 200 கோடி வீதம், 1,000 கோடி நிதியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில், 2023-24ம் ஆண்டிற்கு, 4.30 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த நிதியில், சிமென்ட் சாலை, தார் சாலை, பேவர் பிளாக் சாலை, குடிநீர் வசதி, சுடுகாடு மற்றும் தேவையான அடிப்படை வசதி ஆகியவை செய்து கொடுக்க, பணி விவரம் தயாரிக்கப்பட்டது. மாவட்ட குழு ஒப்புதலுடன், மாநில குழுவிற்கு பரிந்து செய்து, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை வாயிலாக, பணிகள் துவங்கி நடைபெற்று வருகின்றன.
இதன்படி, மீஞ்சூர் ஒன்றியத்தில், 2 கோடியே 87 ஆயிரம், கடம்பத்துார்- 34.50 லட்சம், கும்மிடிப்பூண்டி- 55.91 லட்சம், பூந்தமல்லி-84.07 லட்சம், திருவள்ளூர்-29.70 லட்சம், பூண்டி-9.90 லட்சம் என, மொத்தம், 4 கோடியே 30 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் மதிப்பில் பணிகள் நடைபெற்று, நிறைவடையும் தருவாயில் உள்ளது.

