/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கடம்பத்துார் ஒன்றியத்தில் ரூ.25 லட்சத்தில் வளர்ச்சி பணி
/
கடம்பத்துார் ஒன்றியத்தில் ரூ.25 லட்சத்தில் வளர்ச்சி பணி
கடம்பத்துார் ஒன்றியத்தில் ரூ.25 லட்சத்தில் வளர்ச்சி பணி
கடம்பத்துார் ஒன்றியத்தில் ரூ.25 லட்சத்தில் வளர்ச்சி பணி
ADDED : ஜன 24, 2024 11:50 PM
கடம்பத்துார்:கடம்பத்துார் ஒன்றிய அலுவலகத்தில், 22வது ஒன்றியக்குழு கூட்டம் நேற்று நடந்தது. இதில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வரதராஜன், வேதநாயகி ஆகியோர் முன்னிலை வகிக்க, ஒன்றியக்குழு தலைவர் சுஜாதா தலைமை வகித்தார்.
கூட்டத்தில் முதலில் வரவு - செலவு விபரங்கள் வாசிக்கப்பட்டது. பின், ஒன்றியத்தில் புதுப்பட்டு, சிட்ரம்பாக்கம், எறையாமங்கலம், கீழ்நல்லாத்துார், தொடுகாடு, வலசைவெட்டிக்காடு.
வெங்கத்துார், கடம்பத்துார், தண்டலம், உளுந்தை ஆகிய ஊராட்சிகளில் அரசு பள்ளிக் கட்டடங்களை சீரமைக்க மற்றும் புதிய அங்கன்வாடி கட்டடங்கள் கட்டுவதற்கு என, 25 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும், உளுந்தை ஊராட்சியில் பழுதடைந்த ஊராட்சி அலுவலகம் மற்றும் சுயஉதவிக்குழு கட்டடம் ஆகியவற்றை இடித்து அகற்றுவது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.