/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ரூ.1.20 கோடியில் வளர்ச்சி பணி: எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
/
ரூ.1.20 கோடியில் வளர்ச்சி பணி: எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
ரூ.1.20 கோடியில் வளர்ச்சி பணி: எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
ரூ.1.20 கோடியில் வளர்ச்சி பணி: எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
ADDED : டிச 27, 2025 06:04 AM
திருத்தணி: திருத்தணி ஒன்றியத்தில் அரசு பள்ளிகளுக்கு புதிய வகுப்பறைகள், ரேஷன் கடை, ஊராட்சி அலுவலக கட்டடம் உட்பட 1.20 கோடி ரூபாய் மதிப்பில் கட்டடங்கள் கட்ட, தி-.மு.க., - எம்.எல்.ஏ. சந்திரன் அடிக்கல் நாட்டினார்.
திருத்தணி ஒன்றியத்தில் சத்திரஞ்ஜெயபுரம், செருக்கனுார் ஆகிய கிராமங்களில், அரசு பள்ளிகளுக்கு கூடுதல் வகுப்பறைகள் கட்டும் பணிகள், பீரகுப்பம் பகுதியில் நேரடி கொள்முதல் நிலையம் கட்டடம் ஆகிய பணிகளுக்கு நேற்று, திருத்தணி தி.மு.க., - எம்.எல்.ஏ., சந்திரன் அடிக்கல் நாட்டினார்.
தொடர்ந்து, அலமேலுமங்காபுரம், தும்பிக்குளம், மத்துார், கிருஷ்ணசமுத்திரம், கே.ஜி.கண்டிகை, எஸ்.அக்ரஹாரம் கோரமங்கலம் மற்றும் அகூர் ஆகிய பகுதிகளில், குடிநீர் மேல்நிலை தொட்டிகள், ரேஷன் கடைகள், ஊராட்சி அலுவலகம் மற்றும் அங்கன்வாடி மையம் என, மொத்தம், 1.20 கோடி ரூபாய் மதிப்பிலான கட்டடங்களை எம்.எல்.ஏ., திறந்து வைத்தார்.