/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருமழிசையில் ரூ.67 லட்சத்தில் வளர்ச்சி பணிகள்
/
திருமழிசையில் ரூ.67 லட்சத்தில் வளர்ச்சி பணிகள்
ADDED : ஜன 31, 2024 11:45 PM
திருமழிசை:திருமழிசை பேரூராட்சி அலுவலகத்தில் நேற்று நடந்த பேரூராட்சி கவுன்சிலர்கள் சாதாரண கூட்டத்திற்கு, துணை தலைவர் மகாதேவன் முன்னிலை வகிக்க, பேரூராட்சி தி.மு.க., தலைவர் வடிவேல் தலைமை வகித்தார்.
கூட்டத்தில் வரவு - செலவு உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. பின், 2022 - 23ம் ஆண்டு 15வது நிதிக்குழு மானியத்தில், குபேர கார்டன் பகுதியில், 20 லட்சத்தில் பேவர் பிளாக் சாலை, ராஜேஸ்வரி நகரில் 20 லட்சத்தில் பூங்கா சீரமைப்பு பணிகள் குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும், திடக்கழிவு மேலாண்மை திட்ட வளாக மேற்கு பகுதிக்கு, 7.30 லட்சத்தில் சுற்றுச்சுவர் மற்றும் அம்ருத் திட்டத்தில், 3 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க குடிநீர் தொட்டிக்கு, 20 லட்சத்தில் சுற்றுச்சுவர் என, மொத்தம் 67 லட்சத்தில் வளர்ச்சி பணிகளுக்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதை தொடர்ந்து, சொத்து வரி பாக்கி 1.19 கோடி ரூபாயை வசூலிக்க வீடுகள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலை உட்பட அனைவருக்கும் 'நோட்டீஸ்' வழங்கும் பணி நடந்து வருவதாக பேரூராட்சி அலுவலர்கள் தெரிவித்தனர்.