/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருத்தணி முருகன் கோவிலில் ஆடிப்பூரம் கோலாகலம் அலகு குத்தி, பால்குடம், காவடி எடுத்து வந்த பக்தர்கள்
/
திருத்தணி முருகன் கோவிலில் ஆடிப்பூரம் கோலாகலம் அலகு குத்தி, பால்குடம், காவடி எடுத்து வந்த பக்தர்கள்
திருத்தணி முருகன் கோவிலில் ஆடிப்பூரம் கோலாகலம் அலகு குத்தி, பால்குடம், காவடி எடுத்து வந்த பக்தர்கள்
திருத்தணி முருகன் கோவிலில் ஆடிப்பூரம் கோலாகலம் அலகு குத்தி, பால்குடம், காவடி எடுத்து வந்த பக்தர்கள்
ADDED : ஜூலை 28, 2025 11:33 PM

திருத்தணி, முருகன் கோவிலில், நேற்று நடந்த ஆடிப்பூர விழாவில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் உடல் முழுதும் அலகு குத்தி, காவடிகள் மற்றும் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடனை செலுத்தினர்.
திருத்தணி முருகன் கோவிலில் நேற்று, ஆடிப்பூர விழாவை முன்னிட்டு, அதிகாலை 5:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, தங்ககிரீடம், தங்கவேல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து, மூலவருக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது.
காலை 10:30 மணிக்கு, காவடி மண்டபத்தில் உற்சவர் பெருமானுக்கு, 1,008 பால்குட அபிஷேகம் நடந்தது. இரவு 7:30 மணிக்கு வெள்ளி மயில் வாகனத்தில் உற்சவர் முருகபெருமான், வள்ளி - தெய்வானையுடன் வீதியுலா வந்தார்.
காவடிகளுடன்.... ஆடிப்பூரத்தையொட்டி, சென்னை வண்ணாரபேட்டை, தண்டையார்பேட்டை, கொருக்குபேட்டை, மண்ணடி, புளியந்தோப்பு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து, நேற்று முன்தினம் இரவு, 30,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்தனர்.
நேற்று காலை உடல் முழுதும் அலகு குத்தியும், மலர் மற்றும் மயில் காவடிகள் எடுத்து, பம்பை, உடுக்கை முழங்க, கிராமிய கலைநிகழ்ச்சிகளுடன் மூலவரை தரிசித்தனர். சில பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்தனர்.
நேற்று, 75,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் மலைக்கோவிலில் குவிந்ததால், பொதுவழியில் மூலவரை தரிசிக்க, மூன்று மணி நேரமும், தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் ஒன்றரை மணி நேரமும் காத்திருந்து தரிசித்தனர்.
அம்மனுக்கு வளைகாப்பு திருத்தணி அக்கைய்யாநாயுடு சாலை, தணிகாசலம்மன் மடம் கிராமத்தில் உள்ள படவேட்டம்மன் கோவில்களில், நேற்று காலை 8:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.
இக்கோவிலில் உள்ள அம்மனுக்கு, 10,008 வளையல் அணிவித்து, வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது.
அதேபோல், திருத்தணி ஒன்றியத்தில் உள்ள அனைத்து அம்மன் கோவில்களில் மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தன.