/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஆண்டார்குப்பத்தில் தங்கும் விடுதிகள் இல்லை முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் தவிப்பு

ADDED : டிச 07, 2024 08:57 PM
பொன்னேரி,:பொன்னேரி அடுத்த, ஆண்டார்குப்பம் பகுதியில் பாலசுப்ரமணிய சுவாமி கோவில் உள்ளது. பரணி நட்சித்தி நாளன்று கோவிலுக்கு வந்து, அன்றிரவு முருகனை தரிசித்து, அங்கேயே தங்கி, மறுநாள் கிருத்திகை வழிபாடுகளை தரித்து செல்கின்றனர். அந்நாளில் பக்தர்களின் வருகை அதிகமாகவே இருக்கிறது.
மேலும், இந்த கோவிலில் முகூர்த்த நாட்களில், நாளெனறிற்கு, 10 - 15 திருமணங்கள் நடைபெறுகின்றன. திருமண வீட்டார்கள் முகூர்த்த நாட்களில், ஒருநாள் முன்னதாக கோவிலுக்கு வந்து தங்க திட்டமிடுகின்றனர்.
ஆனால், இப்பகுதியில் தங்குவதற்கு தங்கும் விடுதிகள் ஏதும் இல்லாததால் அவர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
கோவில் வெளிப்புற வளாகங்களிலும், திறந்தவெளியிலும் தங்கி, அடுத்தநாள் குளிக்க, உடல் உபாதைகளை கழிக்க இடம் தேடி அலைந்து பெரும் இன்னலுக்கு ஆளாகின்றனர்.
அதேபோன்று வேண்டுதல்களை நிறைவேற்றுவதற்காக இரவு தங்கும் பக்தர்களும், தங்குவதற்கு இடமில்லாமல் தவிக்கின்றனர்.
ஹிந்து சமய அறநிலைத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலுக்கு ஏராளமான நிலங்கள் உள்ளன. அவற்றில் தங்கும் விடுதிகளை அமைப்பதன் வாயிலாக பக்தர்களுக்கும், திருமணம் நடத்துபவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
இது குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று தங்கும் விடுதிகளை அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.