sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

தேர்த்திருவிழா நாளில் முதல்வர் வருகைக்கு திட்டம் மாற்று தேதியில் திட்டமிட பக்தர்கள் எதிர்பார்ப்பு

/

தேர்த்திருவிழா நாளில் முதல்வர் வருகைக்கு திட்டம் மாற்று தேதியில் திட்டமிட பக்தர்கள் எதிர்பார்ப்பு

தேர்த்திருவிழா நாளில் முதல்வர் வருகைக்கு திட்டம் மாற்று தேதியில் திட்டமிட பக்தர்கள் எதிர்பார்ப்பு

தேர்த்திருவிழா நாளில் முதல்வர் வருகைக்கு திட்டம் மாற்று தேதியில் திட்டமிட பக்தர்கள் எதிர்பார்ப்பு


ADDED : ஏப் 01, 2025 12:39 AM

Google News

ADDED : ஏப் 01, 2025 12:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொன்னேரி, பொன்னேரியில் பிரசித்த பெற்ற கரிகிருஷ்ண பெருமாள் கோவில் பிரம்மோத்சவம், வரும் 13ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. வரும் 17ம் தேதி அகத்தீஸ்வர பெருமானும், கரிகிருஷ்ண பெருமானும் சந்திக்கும் சந்திப்பு திருவிழா நடைபெறுகிறது. இது நள்ளிரவு துவங்கி, 18ம் தேதி காலை 10:00 மணிக்கு முடியும்.

வரும் 19ல் தேர்திருவிழா நடக்கிறது. இதில், சந்திப்பு மற்றும் தேர்த்திருவிழாக்கள் விமரிசையாக நடைபெறும் என்பதால், சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பர்.

காலை 9:00 மணிக்கு, நிலையில் இருந்து புறப்படும் தேர், நகரத்தில் உள்ள மாடவீதிகள் வழியாக வலம் வந்து, பகல் 1:00 மணிக்கு பொன்னேரி பழைய பேருந்து நிலைய வளாகத்தில் நிறுத்தப்பட்டு, பின் மாலை 4:00 மணிக்கு அரிஅரன் பஜார் வழியாக தேரடி நிலைக்கு கொண்டு வரப்படும்.

அங்கு, 10,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தேரின் மேற்பகுதிக்கு சென்று கரிகிருஷ்ண பெருமானை வணங்கி செல்வர். இதுவும், பொன்னேரி நகர பகுதியில் தான் நடைபெறும். இது, மாலை 5:00 மணிக்கு துவங்கி, இரவு 11:00 மணி வரை நடைபெறும். இதற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு அவசியம் தேவைப்படும்.

இந்நிலையில், வரும் 19ல், பொன்னேரியில் நடைபெறும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில், தமிழக முதல்வர் ஸ்டாலின் பங்கேற்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்காக, பொன்னேரி அடுத்த மாதவரம் பகுதியில் தனியார் நிலங்கள் துாய்மைப்படுத்தப்பட்டு உள்ளன.

அன்றைய தினம், மீஞ்சூர் வழியாக வரும் தமிழக முதல்வர், பொன்னேரி நகரத்தில் 'ரோடு ஷோ' நடத்தவும் திட்டமிடப்பட்டு உள்ளது. தேர்த்திருவிழா நடைபெறும் நாளில், முதல்வர் வருகைக்கு திட்டமிடப்பட்டு உள்ளதால், பக்தர்களுக்கு தேவையற்ற நெருக்கடிகள் ஏற்படுவதுடன், பாதுகாப்பு கெடுபிடிகளால் கடும் சிரமத்திற்கு ஆளாக நேரிடும்.

முதல்வர் வருகை என்பதால், இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே அவர் வந்து செல்லும் வழித்தடங்களில் கடும் பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றப்படும். இரண்டு நாட்களும் சந்திப்பு மற்றும் தேர்த்திருவிழா நடைபெற உள்ள நிலையில், பக்தர்கள் திருவிழாக்களில் பங்கேற்பதில் பல்வேறு நடைமுறை சிக்கல்களை சந்திக்க நேடும்.

பல்வேறு பகுதிகளில் இருந்து, தமிழக முதல்வர் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு வரும் கட்சியினரின் வாகனங்களால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். இது பக்தர்கள் மற்றும் மக்களிடையே கடும் அதிருப்தியை உருவாக்கும்.

எனவே, முதல்வரின் வருகையை வேறு தேதிக்கு மாற்றினால், பக்தர்களின் அதிருப்தியை தவிர்க்கலாம் என, சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். உள்ளூர் போலீசாரும் முதல்வரின் வருகையின்போது, திருவிழாக்கள் நடைபெறுவது குறித்து உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.






      Dinamalar
      Follow us