/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருத்தணி கோவிலில் குவிந்த பக்தர்கள் 3 மணி நேரம் காத்திருந்து தரிசனம்
/
திருத்தணி கோவிலில் குவிந்த பக்தர்கள் 3 மணி நேரம் காத்திருந்து தரிசனம்
திருத்தணி கோவிலில் குவிந்த பக்தர்கள் 3 மணி நேரம் காத்திருந்து தரிசனம்
திருத்தணி கோவிலில் குவிந்த பக்தர்கள் 3 மணி நேரம் காத்திருந்து தரிசனம்
ADDED : மார் 04, 2024 06:37 AM

திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலுக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து மூலவர் முருகபெருமானை வழிபட்டு செல்கின்றனர்.
நேற்று விடுமுறையான ஞாயிற்றுக்கிழமை என்பதால் வழக்கத்திற்கு மாறாக முருகன் மலைக்கோவிலுக்கு அதிகாலை, 5:00 மணி முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலைக்கோவிலில் குவிந்தனர். பெரும்பாலான பக்தர்கள் இருசக்கர வாகனம், கார், வேன் மற்றும் பேருந்துகள் மூலம் மலைக்கோவிலுக்கு வந்ததால் மலைப்பாதையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
மேலும் மலைக்கோவில் தேர்வீதியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனத்திற்கு குவிந்ததால் பொதுவழியில், மூன்று மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
அதேபோல், 100 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் பெற்றவர்கள் ஒன்றரை மணி நேரம் வரிசையில் காத்திருந்து மூலவரை வழிபட்டனர்.
முன்னதாக அதிகாலை 4:30 மணிக்கு மூலவருக்கு பஞ்சாமிர்த அபிஷேகம், தங்கவேல், தங்க கிரீடம் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடந்தது. இரவு, 7:00 மணிக்கு உற்சவர் தங்கத்தேரில் தேர்வீதியில் உலா வந்து அருள்பாலித்தார்.
l திருத்தணி முருகன் கோவிலில் பிரம்மோற்சவம் நிறைவடைந்த ஏழாம் நாளில் இருந்து மூன்று நாட்கள் உற்சவர் முருகபெருமானுக்கு தவன உற்சவம் நடைபெறும்.
அந்த வகையில், கடந்த மாதம், 15ம் தேதி மாசி மாத பிரம்மோற்சவ விழா துவங்கி, பிப்.23ம் தேதி உற்சவருக்கும் வள்ளிக்கும் திருக்கல்யாணம் நடந்தது.
உற்சவர் முருக பெருமானுக்கும், வள்ளிக்கும் திருமணம் முடிந்ததும் உஷ்ணத்தில் இருப்பார். அவரை குளிர்விக்க மூன்று நாட்கள் தவன உற்சவம் கடந்த, 1 ம் தேதி இரவு துவங்கியது.
இதற்காக மலைக்கோவிலில் உள்ள தவன மண்டபம் முழுதும் தவன இலை மற்றும் மல்லிகை மலர்களால் அலங்காரம் செய்யப்படிருந்தது.
பின் இரவு 7:00 மணிக்கு உற்சவர் முருக பெருமான் வள்ளி, தெய்வானையுடன் மண்டபத்தில் எழுந்தருளினார்.
பின் தவனம் மற்றும் மல்லிகை பூக்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது.
பின் தேர்வீதியில் உற்சவர் முருக பெருமான் வீதியுலா வந்து அருள்பாலித்தார். பக்தர்களுக்கு நாட்டு சர்க்கரை பிரசாதம் வழங்கப்பட்டது. நேற்றுடன் தவன உற்சவம் நிறைவு பெற்றது.

