/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருத்தணி கோவிலில் குவிந்த பக்தர்கள் 4 மணி நேரம் காத்திருந்து தரிசனம்

ADDED : நவ 10, 2024 02:16 AM

திருத்தணி:திருத்தணி முருகன் கோவிலில் நேற்று முன்தினம் கந்தசஷ்டி விழா நிறைவடைந்தது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துக் கொண்டு பல மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். இந்நிலையில், நேற்றும் மலைக்கோவிலில் காலை முதலே பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.
இதனால் பொதுவழியில் மூலவரை தரிசிக்க மலைக்கோவிலில், 750 மீட்டர் துாரம் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, 4 மணி நேரத்திற்கு பின் மூலவரை தரிசனம் செய்தனர்.
அதே போல் நுாறு ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்களும் இரண்டு மணி நேரத்திற்கு மேல் வரிசையில் காத்திருந்து மூலவரை வழிப்பட்டனர். பக்தர்கள் பாதுகாப்பிற்காக, 20க்கும் மேற்பட்ட போலீசார் பணியில் இருந்தனர்.