/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருத்தணி கோவிலில் குவிந்த பக்தர்கள் 3 மணி நேரம் காத்திருந்து தரிசனம்
/
திருத்தணி கோவிலில் குவிந்த பக்தர்கள் 3 மணி நேரம் காத்திருந்து தரிசனம்
திருத்தணி கோவிலில் குவிந்த பக்தர்கள் 3 மணி நேரம் காத்திருந்து தரிசனம்
திருத்தணி கோவிலில் குவிந்த பக்தர்கள் 3 மணி நேரம் காத்திருந்து தரிசனம்
ADDED : ஜன 27, 2025 02:11 AM

திருத்தணி:நாட்டின், 76வது குடியரசு தினவிழா நேற்று கொண்டாடப்பட்டது. இதனால், மத்திய, மாநில அரசு விடுமுறை என்பதால் வழக்கத்திற்கு மாறாக, திருத்தணி முருகன் மலைக்கோவிலுக்கு நேற்று காலை முதலே, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.
இதனால், பொதுவழியில், நீண்ட வரிசையில், மூன்று மணி நேரம் காத்திருந்து மூலவரை தரிசனம் செய்தனர். அதே போல, 100 ரூபாய் கட்டண டிக்கெட் பெறுவதற்கு பக்தர்கள் நீண்ட வரிசையில் ஒன்றரை மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். இந்த தரிசன வழியிலும் திரளான பக்தர்கள் குவிந்ததால் தள்ளு,முள்ளு ஏற்பட்டது.
சில பக்தர்கள் காவடிகளுடன் வந்தும், மொட்டை அடித்தும் முருகப் பெருமானை வழிப்பட்டனர். முன்னதாக, அதிகாலை 5:00 மணிக்கு, மூலவருக்கு பஞ்சாமிர்த அபிஷேகம், தங்கவேல், தங்ககீரிடம் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடந்தது.
ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்ததால், மலைக்கோவில் வாகனங்கள் நிறுத்துமிடம் மற்றும் மலைப்பாதையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால், திருத்தணி- - அரக்கோணம் மாநில நெடுஞ்சாலையிலும் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் கடும் சிரமப்பட்டனர்.
திருத்தணி டி.எஸ்.பி., கந்தன் தலைமையில், 25க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.