/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருத்தணி முருகன் கோவிலில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்
/
திருத்தணி முருகன் கோவிலில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்
திருத்தணி முருகன் கோவிலில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்
திருத்தணி முருகன் கோவிலில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்
ADDED : மே 19, 2025 02:14 AM

திருத்தணி:திருத்தணி முருகன் கோவிலுக்கு தமிழகம்உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள்வந்து மூலவரை தரிசித்து செல்கின்றனர்.
நேற்று வார விடுமுறைநாளான ஞாயிற்றுக்கிழமை மற்றும் திருமண முகூர்த்தம் என்பதால், வழக்கத்திற்கு மாறாக பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.
குறிப்பாக, மலைக்கோவிலில், 15 திருமண முகூர்த்தமும் நடந்தது. நகரத்தில், 35 தனியார் திருமண மண்டபத்தில் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு வந்த உறவினர்கள் பெரும்பாலானோர் முகூர்த்தம் முடிந்ததும், முருகன் மலைக்கோவிலுக்கு சென்று மூலவரை தரிசித்தனர்.
மேலும், விடுமுறை நாளில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்ததால், பொது வழியில் மூலவரை தரிசிக்க, மூன்று மணி நேரத்திற்கு மேல் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசித்தனர்.
அதேபோல், 100 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள், ஒன்றரை மணி நேரத்திற்கு மேல் வரிசையில் காத்திருந்து மூலவரை வழிபட்டனர்.
முன்னதாக, நேற்று அதிகாலை 5:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தங்கவேல், தங்ககிரீடம் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து, சிறப்பு தீபாராதனை நடந்தது.
திருத்தணி டி.எஸ்.பி., கந்தன் தலைமையிலான, 15க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.