/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பாழடைந்த பள்ளி கட்டடத்தால் மாணவ - மாணவியருக்கு ஆபத்து
/
பாழடைந்த பள்ளி கட்டடத்தால் மாணவ - மாணவியருக்கு ஆபத்து
பாழடைந்த பள்ளி கட்டடத்தால் மாணவ - மாணவியருக்கு ஆபத்து
பாழடைந்த பள்ளி கட்டடத்தால் மாணவ - மாணவியருக்கு ஆபத்து
ADDED : ஆக 04, 2025 02:53 AM

திருவாலங்காடு:எந்நேரமும் இடிந்து விழலாம் என்ற நிலையில் உள்ள பாழடைந்த கட்டடத்தால், அங்கன்வாடி மழலையர் மற்றும் அரசு பள்ளி மாணவ - மாணவியருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.
திருவாலங்காடு ஒன்றியம், ஆற்காடு குப்பம் ஊராட்சி அரசு உயர்நிலைப் பள்ளி, 15 ஆண்டுகளுக்கு முன், மேல்நிலை பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது.
ஆனால், மேல்நிலைப் பள்ளி வகுப்புகளுக்கு ஏற்ப கூடுதல் கட்டடங்கள் இல்லை. இடவசதி பற்றாக்குறையால், கொசஸ்தலையாறு அருகே அரசுக்கு சொந்தமான 3 ஏக்கர் நிலத்தில், பள்ளிக்காக புது கட்டடம் கட்டப்பட்டது.
அதேநேரம், உயர்நிலைப்பள்ளி இருந்த இடத்தில் கட்டடம் பயன்பாடின்றி, 15 ஆண்டுகளுக்கு மேலாக பாழடைந்த நிலையில் உள்ளது.
இந்த பாழடைந்த கட்டடம் அருகே, அங்கன்வாடி மற்றும் அரசு தொடக்கப்பள்ளி உள்ளதால், குழந்தைகள் மற்றும் மாணவ - மாணவியர் விளையாட பாழடைந்த கட்டடம் அருகே செல்கின்றனர்.
அவ்வாறு செல்லும்போது, விபத்து அசம்பாவிதங்கள் ஏற்படும் ஆபத்து உள்ளது. எனவே, 'பாழடைந்த கட்டடத்தை இடித்து அகற்ற, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, பெற்றோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.