/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தினமலர் செய்தி எதிரொலி சேதமடைந்த சாலைக்கு விமோசனம் ரூ.10 லட்சத்தில் சிமென்ட் கல் சாலை

ADDED : நவ 12, 2025 10:10 PM

திருமழிசை: நம் நாளிதழில் வெளியான செய்தியின் எதிரொலியாக, திருமழிசை தெற்கு மாடவீதியில், 10 லட்சம் ரூபாயில் சிமென்ட் கல் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
திருமழிசை பேரூராட்சி அலுவலகம் அருகே, ஜெகந்நாத பெருமாள் கோவில் உள்ளது. தெற்கு மாடவீதியில், பேரூராட்சி அலுவலகம் அருகே உள்ள சாலை சேதமடைந்து, மோசமான நிலையில் இருந்தது.
மேலும், மழைநீருடன், கழிவுநீர் கலந்து சாலையில் குளம் போல் தேங்கியது. இதனால் ஏற்படும் துர்நாற்றத்தால் பகுதி மக்கள், பள்ளி மாணவ- - மாணவியர் கடும் சிரமப்பட்டு வருவதாக, நம் நாளிதழில் செய்தி வெளியானது.
இதன் எதிரொலியாக, பேரூராட்சி நிர்வாகம் 10 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்து, 8 மீட்டர் அகலம், 80 மீட்டர் நீளத்தில், சிமென்ட் கல் சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது.